கேரளா சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில், இன்று மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஜனவரி 14-ஆம் நாள் மகரஜோதி தரிசனம் நடைபெறுவுள்ள நிலையில் இன்று மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 19-ஆம் நாள் வரை நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மகரவிளக்கு பூஜைக்கான காலம் நெறுங்குவதையொட்டி, மகரவிளக்கு காலத்திற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. பூஜைக்கு தேவையாக பொருட்கள் அனைத்தும், ட்ரக்குகள் மூலம் கொண்டு வரப்பட்டன. கோவில் சுற்றுப்புறங்கள் துாய்மைப்படுத்தப்பட்டுள்ளன.


முன்னதாக மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, இன்று நடை திறந்து தீபம் ஏற்றிவைத்தார். இதனையடுத்து இன்று வேறு எந்த பூஜைகளும் நடத்தப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு, 11:00 மணியளவில் அடைக்கப்படும் நடை நாளை அதிகாலை, 3:00 மணியளவில் திறக்கப்படும். அபிஷேகத்திற்கு பின்னர், மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு துவங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 18-ஆம் நாள் வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.


வரும் ஜனவரி 14-ஆம் நாள் மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ள நிலையில், ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், வரும் 12-ஆம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படுகின்றன. 


முனதாக மண்டல கால பூஜையின் போது சபரிமலைக்கு பெண்கள் வரவால் சற்று பதற்றமான நிலை நிலவியது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜையின் போது இது போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதற்கிடையில் சபரிமலை பகுதியில் பாதுகாப்பு நலன் கருதி விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவும் வரும் ஜனவரி 5-ஆம் நாள் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.