Sensory heritage: கிராமப்புறங்களின் ஒலிகளையும் வாசனையையும் பாதுகாக்கும் சட்டத்தை பிரான்ஸ் நிறைவேற்றியிருக்கிறது. கிராமப்புற வாழ்க்கையின் அன்றாட அம்சங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்துபவை. ஆனால் அவை இன்றைய நவீன உலகில் அனர்த்தமாகியிருக்கிறது. இன்றும் அமைதியும், நிம்மதியும் தேவை என்றால் கிராமத்தையே நாம் நாடுகிறோம். இதை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்த பிரான்ஸ், கிராமப்புற வாழ்க்கையின் "உணர்ச்சி மிகுந்த பாரம்பரியத்தை" பாதுகாக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராமப்புறங்களின் ஒலிகளையும் வாசனையையும் பாதுகாக்க முடியுமா? நமது மண்ணின் மணத்தையும், பறவைகளின் (Birds) ஒலியையும், விலங்குகளின் சப்தத்தையும், ஓடும் நதி நீரின் சலசல என்ற ஒலியையும் பாதுகாக்க ஒரு நாடு சட்டம் இயற்றியிருக்கிறது. இது சாத்தியமா? சாத்தியம் தான் என்கின்றனர் பிரான்சு நாட்டு மக்கள்.


இனி நகரவாசிகள் விலங்குகளின் வாசனை அல்லது அசுத்தம் பரவுவதைப் பற்றி புகார் செய்ய முடியாது. இது உணர்வு சார்ந்த விஷயமாகிவிட்டது. நவீனமயமாகும் கிராமப்புறங்களில் (Villages) நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் பல ஒலி மாசு மற்றும் துப்புரவு தொடர்பானதாக இருக்கிறது.  


Also Read | தை மாதத்தில் வரும் கிருத்திகைக்கு என்ன விசேஷம்


நீதிமன்ற வழக்குகளின் தொடர்ச்சியாக முன்மொழியப்பட்ட ஒரு மசோதாவுக்கு பிரான்ஸ் நாட்டு செனட்டர்கள் ஒப்புதல் அளித்தனர். கிராமங்களில் விடுமுறையை கழிப்பதற்காக வீடு வைத்திருப்பவர்கள் மற்றும் விடுமுறையை கழிக்க கிராமங்களுக்கு வருபவர்கள் விலங்குகள் மற்றும் பறவைகளின் சத்தங்களைப் பற்றி புகார் அளிப்பது வழக்கம். அப்படி புகாரளிப்பவர்களுக்கு எதிராக கிராமவாசிகள் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டது.  


"கிராமப்புறங்கள் இந்த இசை, கிளைகள் மற்றும் இலைகளின் சலசலப்பு மற்றும் நாம் கண்களை மூடும்போது ஒரு நிம்மதியை உருவாக்கும், மனதிற்கு அமைதியைத் தரும்" என்று செனட்டர் பியர்-அன்டோயின் லெவி (Pierre-Antoine Levi) வாக்களிப்பதற்கு முன்பு கூறினார்.


தென்மேற்கு பிரான்சில் (France) மாரிஸ் (Maurice) என்ற சேவல் எழுப்பும் சப்தம் மிகவும் தொல்லையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன., கிராமப்புறங்களை பாதுகாக்க போராடும் ஆர்வலர்கள், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.  


Also Read | காசி யாத்திரை செல்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் தீருமா?


2019 செப்டம்பரில் மொரிஸின் (Maurice) உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, மேற்கு பிரான்சில் ஒரு வாத்து மற்றும் அதன் உரிமையாளரான விவசாயிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  வாத்து எழுப்பும் சப்தம் பெரிய இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் தொடர்ந்த வழக்கில் வாத்து உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.  .


விரிவடையும் நகரமயமாக்கல் ஏற்படுத்தும் பல்வேறு சிக்கல்களுக்கும், பிரான்சின் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுப்பதாக இந்த சட்டம் இருக்கும் என்று செனட்டர்கள் கூறுகின்றனர். இந்த சட்டம், கிராமப்புறங்களில் மண்ணின் மணத்துடன் பறவைகளில் ஒலிகள், டிராக்டர்கள் மற்றும் தேவாலய மணியோசைகள் என பல கிராமப்புறா அடையாளங்களை தொலைக்காமல் இருக்க இந்த சட்டம் பயனுள்ளதாக இருக்கும்.


Also Read | மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR