புதன்கிழமை தினபலன்: ஜூலை 1, 202


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்
இன்று முக்கிய முடிவுகளும், மாற்றங்களும் வரும். நீண்டகாலமாக முயற்சித்த பல விஷயங்கள் சாதகமாக கூடிவரும். ராகுவின் அம்சம் காரணமாக மனைவி மூலம் பெரும் தனமும், சொத்து சேர்க்கையும் உண்டு. மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5


ரிஷபம்
இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வேலை சம்பந்தமாக அலைச்சல், செலவுகள் இருக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற உங்களது நீண்ட நாள் ஆசைக்குண்டான முயற்சி நிறைவேறும். ராசிநாதனின் சாரம் காரணமாக தெய்வீக நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


மிதுனம்
இன்று ஆலய திருப்பணி, கோயில் கும்பாபிஷேகம், குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்புகளும், வேலைச்சுமையும் கூடும். வயிறு சம்பந்தமான உபாதைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7


கடகம்
இன்று கண் சம்பந்தமான உபாதைகள் வரலாம். நிலம், வீடு போன்றவற்றை விற்பதற்கும், வாங்குவதற்கும், மாற்றி அமைப்பதற்குமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்யோகத்தில் முன்னேற்றமான அம்சங்கள் உண்டாகும். வாகனம் வாங்க, வீடுகட்ட அலுவலக கடன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9


சிம்மம்
இன்று விரும்பிய இடமாற்றமும் உண்டு. வியாபாரம் வளர்ச்சியடையும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் சகிப்புத்தன்மையுடன் இருப்பது நல்லது. உங்கள் எண்ணங்களும், திட்டங்களும் செயல் வடிவம் பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


கன்னி
இன்று எதிர்ப்புகள் மறையும். உங்களுக்கு எதிராக காய் நகர்த்தியவர்கள் தோல்வி அடைவார்கள். உங்களின் ராசிநாதனின் சஞ்சாரத்தால் உங்களுக்கு தெளிவான சிந்தனை வரும். முக்கிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9


துலாம்
இன்று தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் மறையும். அவர் மூலம் முக்கிய உதவிகள் கிடைக்கும். திசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு சொந்த இடத்தில் வீடு கட்டும் யோகம் உண்டு. மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7


விருச்சிகம்
இன்று சகோதர உறவுகளால் அலைச்சல், பயணங்கள், செலவுகள் இருக்கும். வண்டி தொடர்ந்து செலவு வைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல் பொருட்கள் சேர்க்கையுண்டு. குழந்தைகளின் திருமணத்துக்கு வரன் தேடினீர்களே, பொருத்தமான நல்ல சம்பந்தம் கூடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5


தனுசு
இன்று பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு சம்பந்தமாக ஏற்பட்ட தடைகள் நீங்கி நல்ல சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகம் சாதகமாக இருக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


மகரம்
இன்று சம்பள உயர்வு பற்றிய தகவல் வரும். இழுத்தடித்து வந்த விவகாரங்கள் நல்லபடியாக முடியும். வியாபாரம் இரட்டிப்பாகும். புதிய ஏஜென்சிகள் எடுப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9    


கும்பம்
இன்று முக்கிய விஷயங்களில் குடும்பத்தினரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது முக்கியம். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை விஷயமாக பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். பணப் பற்றாக்குறை காரணமாக தடைபட்டு நின்ற கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9


மீனம்
இன்று குடும்பத்தில் சகிப்புத் தன்மையுடனும், விட்டுக் கொடுத்தும் செல்வது நல்லது. கடல் கடந்து செல்வதற்கான யோகம் வந்துள்ளது. பூர்வீக சொத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். ஒரு சொத்தை விற்று இன்னொரு சொத்து வாங்கும் யோகம் உள்ளது. கர்ப்பிணிகள் நிதானமாக இருப்பது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9