கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயம் மாதாந்திர பூஜைகளுக்காக இந்த மாதம் 17ம் தேதி (2021, ஜூலை 17) திறக்கப்படுகிறது. ஆன்லைனில் பதிவு செய்து ஆலயத்திற்கு வர அனுமதி பெற்றவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வருவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.


மாதவிடாய் ஏற்படும் வயதை சேர்ந்த 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வயது வேறுபாடு இல்லாமல் எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


தற்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இம்மாதம் 17 முதல் 21ஆம் தேதி வரை திறக்கப்பட உள்ளது. இந்த ஐந்து நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  


Also Read | சபரிமலை தரிசனம்: புதிய விதிமுறைகள், இந்த சான்று அவசியம்!!


ஆன்லைன் மூலம் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். நாளொன்றுக்கு  5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும், தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதில் கொரோனா இல்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.


கொரோனா தடுப்பூசியை  முழுமையாக போட்டுக் கொண்டவர்கள், அந்த சான்றை காட்டினால் சபரிமலை ஆலயத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.  


வழிபாட்டு தலங்களை திறக்க கேரள மாநில அரசு அண்மையில் அனுமதி அளித்ததை அடுத்து, ஆலயங்கள், ஆலயங்கள், மசூதிகள் தேவாலயங்கள் என வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டது.


Also Read | கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR