இதிகாசங்களின் அடிப்படையில் பண்டைய தமிழர்களின் திருமணங்களில் தாலி அணியும் பழக்கம் இல்லை. வேதங்கள் சொல்லும் திருமணங்களிலும் தாலிக் கட்டும் சடங்கு என்பது ஓர் அங்கமாக அமையவில்லை.  சீதை-ராமர் திருமணத்தில் கூட தாலி கட்டும் சடங்கு என்பது இடம்பெறுவதாக தெரியவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேதக்காலங்களில் கைத்தலம் பற்றுதலே திருமணம் என்று அறியப்பட்டது. வேதக்காலத்தைச் சேர்ந்த காரணத்தால் தான் ஆண்டாள் திருமணத்திலும் தாலி இல்லை என்ற கூற்று உண்டு. 


அகநானூறு 7-ஆம் பாடலில் 17, 18 வரிகளில் “பொன்னோடுபுலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி” என்ற குறிப்பில் காதலன் தான் வேட்டையாடிய புலியின் பல்லை, மணிகளோடு கோர்த்து காதலிக்கு அளிக்கிறான். இச்செயலை வீரத்தின் சின்னமாக அக்கால கட்டத்தில் கருதினர், அதுவே திருமணமாகவும் கருதப்பட்டது.


நாளடைவில் புலிப் பல்லுக்கு பதிலாக, மஞ்சளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதன் பின்னர், பொன் தாலி உறுவெடுத்தது. “ஈகையரிய இழையணி மகளிர்” என புறநானூறு தாலி பற்றியகுறிப்பை காட்டுவதையும் நாம் பார்க்கின்றோம்.


எஞ்சி இருக்கும் பழமையான தமிழ் இலக்கணங்களில் ஒன்றான தொல்காப்பியம் கூற்றின்படி திருமணங்களை இரு வகையாக பிரிக்கலாம்.


கற்புத்திருமணம், - 


“கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன், கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே“ 
(தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல்-1)


“களவுத்திருமணம்” - அதாவது மணப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் தலைவன் தன் ஊருக்குப் பெண்ணை அழைத்துச் சென்று செய்து கொள்ளும் திருமணம். களவுத் திருமணத்தினை தொல்காப்பியம் கற்புத்திருமணமாகச் சொல்லவில்லை, 


“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான” (தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 2)


கற்புத்திருமணம் ஆனாலும், களவுத்திருமணம் ஆனாலும் திருமணச்சடங்குகள் உண்டு என்கிறது தொல்காப்பியம்.


இத்திருமண நிகழ்வுகளில் மணமகள் தன் உரியவலை பிரருக்கு அடையாளக் படுத்த தனது வீரப்பரிசினை (புலி பல்) அணிவித்ததே தாலியாக கருதப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் பண்பாட்டு வளர்ச்சியின் காரணமாக தாலியும் மெட்டியும் இந்து சமயத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக் கூறப்படுகிறது.


ஆண் என்பவன் தலை நிமிர்ந்து நடப்பவன், எதிரில் வரும் பெண் கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்து அவள் மாற்றானுக்கு உரியவள் என ஒதுங்கிக்கொள்வான், அதேப்போல் பெண் என்பவள் தரையை பார்த்து நடப்பவள் ஆகையால் ஆணின் காலில் இருக்கும் மெட்டியை பார்த்து மாற்றாள் கணவனிடம் இருந்த ஒதுங்கிக்கொள்வால் என தாலிக்கும் மெட்டிக்கும் காரணம் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த மெட்டியும் பெண்கள் காலிலே சிக்கிக்கொண்டது வியப்பின் குறி....