காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மானிகா மற்றும் ஹர்மீத் தேசாய் பெயர்கள் அர்ஜூனா விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இந்த காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் வென்று தந்த இந்திய வீராங்கனையான மனிகா பத்ரா மற்றும் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் ஆகிய இருவரின் பெயர்களும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். 


மனிகா பத்ரா, கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் அணிகள் பிரிவிலும் தங்கப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் என 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.


அதேப்போல் ஹர்மீத் தேசாய், டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தங்கப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருதிற்கு டேபிள் டென்னிஸ் சங்கம் பரிந்துரைத்துள்ளது.


இதுதொடர்பாக இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம் தெரிவிக்கையில்... காமன்வெல்த் தொடரில் வலுவான திறனை வெளிப்படுத்திய மனிகாவின் பெயரை விருதுக்கான குழு நிச்சயம் புறக்கணிக்க முடியாது என தெரிவித்துள்ளது.