ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்ப்பாக்கி சண்டையில் 2 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கடந்த மே 29-ந் தேதி, 2003-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிப்பது என்றும், இருதரப்பிலும் போர் நிறுத்த மீறலில் ஈடுபடுவது இல்லை என்றும் உடன்பாடு ஏற்பட்டது. 


இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உள்ள அக்னூர் மாவட்டத்தின் எல்லை பகுதியில், இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். மேலும், பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது தீடீர் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. 


இதையடுத்து இரு வீரர்களுக்கிடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுபற்றிய தகவல்கள் தெரியவில்லை.