அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்பு-க்கு நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் 58 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இதில் மேற்பரப்பில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி வசித்து வருகிறார் அதிபர் டிரம்ப். அதிபராகப் பொறுப்பேற்றதும் டிரம்ப் பெரும்பாலும் வாஷிங்டன் நகரில் தான் வசித்து வருகிறார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து நேற்று மாலை சுமார் இந்திய நேரபம் படி 5.30 மணியளவில் டிரம்ப் டவரின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பிடித்த தீ மளமளவென பரவியது. தகவலறிந்து அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. 


இந்நிலையில், சுமார் 140-ம் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வந்தார். இதை தொடர்ந்து ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 



டிரம்ப் டவரில் ஏற்பட்ட தீயை போராடி விரைவில் அணைத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.