டெல்லியில் ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் (Meganta Line) நேற்று திறக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை இன்று  காலை 6 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனக்புரி மேற்கு மற்றும் கால்காஜி மந்திர் இடையேயான 24.82 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய மெட்ரோ வழித்தடம் திறக்கப்படவுள்ளது. அதன் பிறகு, இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை இன்று காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது.


இந்நிலையில் 3ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த மே 24-ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை இன்று காலை 6 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.


ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில்:-



 


* ஜனக்புரி மேற்கு
* டாப்ரி மோர்
* தசரத்புரி
* பாலம்
* சதர் பஜார்
* டெர்மினல் 1 - IGI ஏர்போர்ட்
* சங்கர் விஹார்
* வசந்த் விஹார்
* முனிர்கா
* ஆர்.கே. புரம்
* ஐஐடி டெல்லி
* ஹோஸ் காஸ்
* பஞ்ச்சீல் பார்க்
* சிராக் தில்லி
* கிரேட்டர் கைலாஷ்
*நேரு என்கிளேவ்
* கால்காஜி மந்திர்