ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தராமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைத்தார்!
18:22 28-05-2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தராமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைத்தார்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புறப்பட்டுள்ளார். ஆலையை நிரந்தராமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகவும், ஆலை தொடர்ந்து செயல்பட்டால் தூத்துக்குடியில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைக்க தற்போது புறப்பட்டுள்ளார்.