என் கணவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர் - ரவியின் மனைவி!
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
பாறைகளைக் உடைப்பதால் ஏற்படக்கூடிய அதிர்வுகளால், அருகில் உள்ள கேரளத்தின் இடுக்கி அணையும், தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்; அணுக்கழிவுகளைக் கொண்டு வந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவார்கள்; அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்து, செயற்கை நியூட்ரான்கள், இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும்.
இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து மதுரையில் கடந்த 31-ம் நாள் மதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் செய்து வந்த மதிமுக தொண்டர்களில் ஒருவரான சிவகாசியை சேர்ந்த ரவி என்பவர் தீக்குளித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஏப்ரல் 1 அன்று உயிர் இழந்தார். இதனையடுத்து அவரது மனைவி அரசின் உதவி நாடி வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல் பொய்யானது என அவரது மனைவி ர.முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது...
"என் கணவர் உயிர் தியாகம் செய்ததை கொச்சைப்படுத்தும் வகையில் அரசு உதவி கேட்டதாக என் கணவரின் தம்பி முருகன் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும், தலைவர் வைகோ அவர்களின் நடைப்பயணத் தொடக்க நிகழ்ச்சியில் என் கணவர் தீக்குளித்து தன் நோக்கத்தை மரண வாக்குமூலமாக நீதிபதியிடமும் கொடுத்தார்.
என் கணவரின் உயிர்த் தியாகத்தை எண்ணி எங்கள் தலைவர் வைகோ அவர்கள் எங்கள் குடுமபத்தைக் காப்பாற்றுவார். அரசின் உதவி எதுவும் தேவை இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.