அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது என்பது தான் உண்மையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்பொழுதெல்லாம் பருவ வயதில் மட்டுமல்ல, பருவம் கடந்தும் வருகிறது இந்த பருக்கள். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், பருவ வயது வந்துவிட்டாலே அனைவருக்குமான பொதுவான பிரச்னையாகிவிட்டது. 


இவற்றைப் போக்குவது மிகவும் கடினமாகும். இவை உடல் சூட்டினால் ஏற்படுவதாகவும், எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது.


மேலும், ஒருவரது முகத்தில் பருக்கள் வருவதற்கு சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பால் பொருட்களை அதிகம் உட்கொள்வது போன்றவைகள் முக்கிய காரணங்களாகும்.


எனவே, ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். 


அன்றாடம் பால் பொருட்களை அதிகம் உட்கொள்வதாலும் பருக்கள் வரும். இதற்கு பால் பொருட்களில் உள்ள இன்சுலின் தான் காரணம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும்.


இந்த பருக்களுக்கு நம்முடைய முன்னோர்களின் சிகிச்சையான ஆவிப் பிடித்தல் என்பது சிறந்து வழிமுறையாகும்.


சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத் துளைகள் திறந்து, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். 


இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.


சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஏனெனில் சர்க்கரை உணவுகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் இருப்பதால், அவை பருக்களை உண்டாக்கும். ஆகவே சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை அளவாக சாப்பிட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.


சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.


கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள், மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.