விடிந்தவுடன் காலை கதிரவனை பார்த்து தொழுத பின்னர் நமது வேலைகளை செய்யும் வழக்கம் அனைவரிடமும் உள்ள ஒரு பழக்கம். அதுவும், குழந்தைகளை அதிகாலை வெயிலில் மருத்துவர்கள் காட்ட சொல்வார்கள். ஏனென்றால் காலை வெயிலில் விட்டமின்கள் அதிகமாக இருக்கிறதாம்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்னதான் நாம் சூரிய பகவானை பார்த்து தொழுது வந்தாலும் சில சமயங்களில் சூரியனை காணக்கூப்டாது என வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லி நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம்..! அதை பற்றி பார்க்கலாம்..!


சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள்..! 


> காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று. 


> மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். 


> ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. 


> நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. 


> ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். 


> நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. 


> பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.