உபி அத்துமீறல்: மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு!
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்கு, பிரோசாபாத் மாவட்டத்தில் மறைந்த சட்டமேதை, அம்பேத்கர் சிலை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. தவிர, ராஜஸ்தான் மாநிலம் அக்ரோல் மாவட்டத்திலும் உள்ள டாக்டர் பிஆர் அம்பேத்கர் சிலையை நேற்றிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், மாநிலத்தின் நான்கு பகுதிகளில், அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களால், மாநிலத்தின் சில பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
முன்னதாக திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. பின்னர் இதனை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையும் அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டது.
நாட்டின் பல பகுதிகளிலும் இந்த சிலை உடைப்பு அநாகரீகம் தொடர்ந்து நிகழத் தொடங்கியது. தொடர்சியாக சிலைகள் உடைக்கப்பட்டு வந்த போதிலும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகின்றனர்.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுவதை கண்டித்து மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நாட்டு மக்கள், மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையிலும் இந்து செயல்பாடுகளில் மாற்றம் நிகழ்ந்தாற் போல் தெரியவில்லை.