வட மாநிலங்களில் புழுதிப்புயல் வீசிவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கு அதிகாமாக அதிகரித்து உள்ளது. .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் வட மாநிலமான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கடந்த இரண்டு நாட்களாக புழுதிப் புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புயல் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் இருள் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.



புழுதி புயல் காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால், பல பகுதியில் மின் சேவை முடங்கியுள்ளது. மேலும் புழுதி புயலினால் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் புழுதிப் புயல் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புழுதி புயல் அடுத்த வாரம் மேற்கு ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பரவும் எனவும், மேலும் இந்த புயலால் அடுத்த இரண்டு வாரங்களில், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பாதிப்படையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


வட மாநிலம் மட்டுமல்லாமல், தென் மாநிலமான தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கனமழை பெய்ததால் 10 பேர் பலியாகி உள்ளனர் என ஏஎன்ஐ(ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


 



 


புழுதிப் புயல் காரணமாக 100-க்கு மேற்ப்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புழுதிப் புயல் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


அந்தந்த மாநில அரசு உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளது.