#Karnataka: காங்கிரஸ் MLA, GS பாட்டில் மீது வழக்கப்பதிவு!
கர்நாடகாவில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி அச்சடிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார காதிகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
கர்நாடகாவில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி அச்சடிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார காதிகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியானது கடந்த மார்ச்., 29 ஆம் நாள் அன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜகத-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹூப்லியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி MLA GS பாட்டில் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார வாசகங்கள் பொத்தித்து அச்சடிக்கப்பட்ட பிராச்சார சீட்டுகளை, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஹூப்லியின் கேஷவப்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகா தேர்தல் 2018...
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24
கர்நாடக தேர்தல் - மே 12, 2018
வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.