தேர்வெழுதாமல் ஆப்சென்ட்டான 32 ஆயிரம் மாணவர்கள்
தமிழகத்தில் இன்று தொடங்கிய பொதுதேர்வில் 32 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்டாகி இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 3,081 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைந்தது. மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு: என்னென்ன கட்டுப்பாடுகள்
அதன்படி, தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தேர்வறைக்குள் வந்த மாணவர்களுக்கு, சரியாக 10 மணிக்கு 3வது மணி அடிக்கப்பட்டவுடன் வினாத்தாள் வழங்கப்பட்டது. 10 நிமிடங்கள் மாணவர்கள் வினாத்தாளை படிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர், 10.10 மணிக்கு நான்காவது மணி அடிக்கப்பட்டவுடன் விடைத்தாள் வழங்கபட்டு, மாணவர்கள் தங்களின் தேர்வை எழுத தொடங்கினர். பிற்பகலில் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. இதில், 3,91,343 மாணவர்கள், 4,31,341 மாணவிகள் என மொத்தம் 8,22,684 பேர் எழுதுவார்கள் என தேர்வுத்துறை அறிவித்திருந்த நிலையில், 32 ஆயிரத்து 674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு அறையில் மாணவர்கள் தடையின்றி தேர்வை எழுதுவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை செய்திருந்தது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தேர்வு நடத்தப்பட்டது. இன்று மொழித்தேர்வை எழுதிய மாணவர்கள் வருகிற 9ஆம் தேதி திங்கட்கிழமை ஆங்கில தேர்வை எழுதுகின்றனர். இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 32 ஆயிரத்து 674 பேர் தேர்வுக்கு வராமல் அப்சென்டானதாக கூறியுள்ளது.
மேலும் படிக்க | பிளஸ் 2 பொதுத்தேர்வு: முகக்கவசம் கட்டாயமா; சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR