14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 25,000 க்கும் மேலான வேலைவாய்ப்பினை ஓட்டல் துறையில் வழங்கி சாதனை படைத்து முன்னோடியாக திகழும் கல்வி நிறுவனம் சென்னைஸ் அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் தான். இப்பொழுது சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி மூலம் விமானக் கல்வியில் அடியெடுத்து வைக்கிறது. மலேசியாவில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷனுடன் இணைந்து இளங்கலை மற்றும் குறுகிய கால தொழிற்கல்விப் படிப்புகளை இந்நிறுவனம் தொடங்க உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச அனுபவத்தை தரும் இந்தப் படிப்புகள் 2024-25 கல்வியாண்டிலிருந்து தொடங்கப்படுகிறது. அதற்கான திறப்பு விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த புதிய நிறுவனத்தை சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர்.பூமிநாதன் திறந்து வைத்தார். நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கவிதா நந்தகுமார், தலைமை கல்வி இயக்குனர் லியோ பிரசாத், டீன் மில்டன் மற்றும் பல்கலைக்கழக தலைவர் பானுமதி பலர் கலந்து கொண்டனர். 


சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் காலேஜ், Bsc ஏவியேஷன் மற்றும் BBA ஏர்லைன் மற்றும் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் என இரண்டு பாடத்திட்டத்துடன் advance cabin crew training, ground staff training, communication and personality development ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட படிப்புக்கான பயிற்சிகளை வழங்கும். இந்த படிப்புகளை வழங்க அனுபவம் வாய்ந்த பிஎச்டி பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக, மலேசியாவில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷன்யில் இரண்டு மாத காலம் படிப்பார்கள். 


மேலும் படிக்க | விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்


யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷன் விமானப் போக்குவரத்து கல்வி மற்றும் பயிற்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும். இங்கு விமானப் போக்குவரத்து தொடர்பான விமானி பயிற்சி, விமான பராமரிப்பு பொறியியல், விமான போக்குவரத்து மேலாண்மை, விமான நிலைய மேலாண்மை மற்றும் விமான வணிக மேலாண்மை போன்ற பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.


சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி மவுண்ட் ரோட்டில் 10,000 சதுர அடி பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இது உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. சர்வதேச விமான நிலைய சூழலையும் கொண்டுள்ளது. மாணவர்கள் தங்கள் எதிர்கால பணியிட சூழலை இங்கே கற்கும் போதே அனுபவிப்பதை இது உறுதிசெய்கிறது. விமான வடிவில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் Thematic வடிவமைக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் விமானப் போக்குவரத்துக் கல்வியில் முதன்முறையாக, 'கற்கும் போது சம்பாதிக்கும்' திட்டத்தை சென்னைஸ் அமிர்தா அறிமுகப்படுத்துகிறது. இதில் மாணவர்களுக்கு படிக்கும் போதே விமானப் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த துறைகளில் மாதம் ரூ. 8,000 முதல் 15,000 வரையிலான சம்பளத்தில் பகுதி நேரமாக வேலைகள் வழங்கப்படும்.


இது குறித்து சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் கூறுகையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வித் துறையில் இந்தியாவிலேயே சென்னைஸ் அமிர்தா தான் ஒரு முன்னோடி. வேலை சார்ந்த படிப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விமானத் துறை சார்ந்தும், விமானத் திறன்களுக்கான தேவையும் வேகமாக அதிகரித்து வருவதால் இந்தத் துறை கணிசமான வளர்ச்சிக்கு தயாராக உள்ளது" என்றார். மேலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் 100% வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை சென்னைஸ் அமிர்தா கல்லூரி வழங்கும் என்றும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ