புது டெல்லி: சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்புத் தேர்வு ஆங்கில வினாத்தாளில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேட்கப்பட்டிருந்த கேள்வி, வினாத்தாளில் இருந்து நீக்கப்படும் என்றும் அதற்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன் தினம் சனிக்கிழமை நடைபெற்ற சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் "பாலியல் உள்ளடக்கம்" (Sexist Content) என குடும்ப ஒழுக்கம் குறித்த கேள்வி இடம் பெற்றிருத்தது மாணவர்களையும் ஆசிரியர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியதோடு  பெரும் விமர்சனத்துக்கும் உள்ளாகி உள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அரசியல் தலைவர்கள் உட்பட பலர் சிபிஎஸ்இ அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளனர்.


வினாத்தாளில் கேட்டக்கப்பட்ட  கேள்விகளில் ஒன்று பெண்களைப் பற்றிய பிற்போக்குத்தனமான சித்தரிப்பு மற்றும் ஆண் மேலாதிக்கத்தைக் குறிக்கும் வகையில் இருந்தது. "வினாத்தாளில் இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தோம் என்று சிபிஎஸ்இ ஆசிரியர்கள் கூறினர்.


அந்த பத்தியில், "மனைவியின் விடுதலையானது குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது என்பதை மக்கள் மெதுவாகக் கவனிக்கிறார்கள். இப்போதெல்லாம் மனைவிமார்கள் குழந்தைகளை சரியாக வளர்ப்பதில்லை. குடும்பத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாவதால் பெற்றோர் என்ற கட்டமைப்பை அவர்கள் அழிக்கிறார்கள். முன்பெல்லாம் ஆண்களுக்கு கீழ்படிந்து நடந்தார்கள். இப்போது அப்படி இல்லை. அதனால் அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளும் ஒழுங்கீனமாக வளர்கின்றன மற்றும் உண்மையில், ஒழுக்கத்தின் வழிமுறைகளை இழந்துவிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது. 


மேலும் இந்த பாராவுக்கு தலைப்பு வைக்க வேண்டும் எனக்கூறி நான்கு ஆப்சன்களும் வழங்கப்பட்டுள்ளது. "குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு? வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம்? வீட்டில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல்? என கேட்கப்பட்டுள்ளது. 



தேர்வு முடிந்த உடனேயே, இந்த வினாத்தால் கேள்வி குறித்து சமூக ஊடக தளங்களில் வைரலானது. இதனையடுத்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு (சிபிஎஸ்இ) பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சிலர் அத்தகைய உள்ளடக்கத்தை அனுமதித்ததற்காக சிபிஎஸ்இ வாரியம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 


சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்புத் தேர்வு ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான குடும்ப அமைப்பு பற்றியும், பெண் விடுதலை பற்றியும் பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தும் வருகின்றனர்.


இதனையடுத்து தற்போது சி.பி.எஸ்.இ தரப்பில் இருந்து, "10 ஆம் வகுப்புத் தேர்வு ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்ற சர்ச்சை கேள்வியை திரும்பப் பெறுவதாக" அறிவித்துள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR