Naalaiya Ilakku: ஜீ தமிழ் நியூஸ் (Zee News Tamil) சார்பில் +2 முடித்த மாணவர்களுக்காக நாளைய இலக்கு என்ற பெயரில் மாபெரும் கல்வி கண்காட்சி ஜூன் 25 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறும். கண்காட்சியில் பங்கேற்க வரும் மாணவர்களின் வசதிக்காக பல்வேறு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ தமிழ் நியூஸ் (Zee News Tamil) சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாபொழி வருகை தர உள்ளார். மேலும் மருத்துவம், பொறியியல், வணிகவியல், நிர்வாகவியல், வரைகலை, மென்பொருள் கல்வி, டிஜிட்டல் தொழில் நுட்பங்கள், டிசைனிங்க் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அனுபவமிக்க கல்வியியல் ஆலோசகர்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றனர். 


மாணவர்கள் முழுமையாக பயன்பெறும் வகையிலும், அவர்களின் எதிர்காலம் நலனைக் கருத்தில்கொண்டு இந்த மாபெரும் கல்வி கண்காட்சி ஜீ தமிழ் நியூஸ் (Zee News Tamil) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாபெரும் கல்வி கண்காட்சிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம். 


+2 முடித்ததும் என்ன படிக்கலாம்? எந்த படிப்பிற்கு என்ன வேலை கிடைக்கும்? வேலை வாய்ப்பு அதிகம் கொடுக்கும் படிப்பு எது? எந்த கல்வியை நிறுவனத்தில் பயில்வது சிறப்பு? புதிய படிகள்? புது கோணங்கள்? திறமைகளுக்கு ஏற்ற படிப்புகள்? போன்ற எண்ணற்ற குழப்பங்களுக்கு இந்த கல்வி கண்காட்சி விடைகொடுக்க காத்திருக்கிறது. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இந்த மாபெரும் கல்வி கண்காட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 


இப்பிரமாண்ட கல்வி கண்காட்சியில் பங்கேற்க முன்பதிவு செய்யுங்கள். முன்பதிவு செய்வது மிகவும் எளிது. கீழு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் விவரங்களை சமர்ப்பித்தால் போதும். 


முன்பதிவு செய்ய: https://zeenews.india.com/tamil/content/nalaya-ilakku


 



மேலும் படிக்க: ‘நாளைய இலக்கு’ - ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR