புதுடெல்லி:  2021 ஆம் ஆண்டின் QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 12 இந்திய நிறுவனங்கள் முதல் 100 இடங்களைப் பிடித்தன. இந்தியாவின் மொத்தம் 25 பாடத்திட்டங்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த 12 நிறுவனங்களில் ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி கரக்பூர், ஐ.ஐ.எஸ்.சி பங்களூர், ஐ.ஐ.எம் அகமதாபாத், ஜே.என்.யூ, அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும்.


இவற்றில், மூன்று இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் ஒரு இடத்தைப் பிடித்தன. ஐ.ஐ.டி பம்பாய் 49 வது இடத்தையும், ஐ.ஐ.டி டெல்லி (தரவரிசை 54), ஐ.ஐ.டி மெட்ராஸ் (தரவரிசை 94) ஆகிய இடங்களையும் பெற்றுள்ளன. ஐ.ஐ.டி கரக்பூர் 101 வது இடத்தையும், ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் 103-வது இடத்தையும், ஐ.ஐ.டி கான்பூர், மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கி முறையே 107 மற்றும் 170 வது இடங்களையும் பெற்றுள்ளன.


Also Read | உங்கள் சம்பளத்தை பாதிக்கும் புதிய மசோதாவால், DA, TA, HRA மாற்றம் ஏற்படுமா?


மேலும், ஐ.ஐ.டி மெட்ராஸ் பெட்ரோலிய பொறியியலுக்காக (Petroleum Engineering) உலகில் 30 வது இடத்தைப் பிடித்தது, ஐ.ஐ.டி பம்பாய் 41 வது இடத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றது, ஐ.ஐ.டி கரக்பூர் தாதுக்கள் மற்றும் சுரங்க பொறியியலில் (for Minerals and Mining Engineering) உலகில் 44 வது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் டெல்லி பல்கலைக்கழகம் உலகில் 50 வது இடத்தைப் பிடித்தது.  


ஐ.ஐ.எஸ்.சி பேங்க்லோர் முறையே பொருள் அறிவியல் மற்றும் வேதியியலுக்கு 78 வது இடத்தையும் 93 வது தரவரிசையையும் பெற்றது.


தனியார் பல்கலைக்கழகமான ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் சட்ட படிப்பில் (law subject) 76 வது இடத்தைப் பிடித்தது.


Also Read | குதூகலத்துக்கு வயது தடையேயில்லை!  83 வயதிலும் குத்தாட்டம் போடும் முன்னாள் முதலமைச்சர்


இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜே.என்.யூ, கலை மற்றும் மனிதநேய (Arts and Humanities) பிரிவில் உலகின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையில் 159 வது இடத்தைப் பிடித்தது, இந்தியாவில் கலை மற்றும் மனிதநேயத் துறையில் சிறந்த கல்லூரியாக உருவெடுத்துள்ளது.


இதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் 252 வது இடத்தைப் பிடித்தது, இது சமூக அறிவியல் மற்றும் நிர்வாகப் படிப்பில் (social sciences and management) உலகளவில் 208 வது இடத்தைப் பிடித்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து ஐ.ஐ.டி- பம்பாய் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 401 முதல் 450 க்கு இடையில் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளன.


மேலும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences (AIIMS)) 248 வது இடத்தைப் பிடித்தது.


Also Read | இனி ரயில் பயணத்திலும் பொழுதுபோக்கு அம்சங்கள்; அசத்தும் Indian Railway


QS அதன் தரவரிசைகளை கல்வி நற்பெயர் (40%), முதலாளியின் நற்பெயர் (10%), ஆசிரிய / மாணவர் விகிதம் (20%), ஆசிரியர்களின் திறன் (20%), மற்றும் சர்வதேச ஆசிரிய விகிதம் மற்றும் சர்வதேச மாணவர் விகிதம் (5%) ) என்பதன் அடிப்படையில் நிர்ணயிக்கிறது.


கலை மற்றும் மனிதநேயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வாழ்க்கை அறிவியல் மற்றும் மருத்துவம், இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை என 5 பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் துறை QS, பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்துகிறது.


தரவரிசையின் சமீபத்திய பதிப்பு மார்ச் 4ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.


Also Read | தங்க நாக்குகளுடன் 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR