முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்விதுறை ஆணையர் ஆகியோரின் தலைமையில் அணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதனையடுத்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தமிழகத்திலுள்ள பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய வழிமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், ஆணையரும் உத்தரவை பிறப்பித்துள்ளனர், அதன்படி.
ALSO READ கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்
1) புதியாக திறக்கப்படும் எந்தவொரு பள்ளிக்கும் அங்கீகாரத்தை வழங்கக்கூடாது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும், பள்ளிகளும் 3 ஆண்டுகளில் அங்கீகாரத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இன்னும் 1985 மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது, அதனை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
2) கல்வியில் எந்த வட்டம் பின்தங்கியுள்ளது என்பதை முறையாக கண்டறிந்து, அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தாக்கம் அளித்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 'வாழ்க்கை திறன் திட்டம்' என்கிற செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
3) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள அரசு பாலிடெக்னீக் விரிவுரையாளர் தேர்வில் எவ்வித முறைகேடும் ஏற்பட்டுவிடாது வண்ணம் முதன்மை கல்வி அலுவலர்கள் அதனை கவனமாக கண்காணித்திட வேண்டும்.
4) தமிழகத்தின் சில மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளமையால், அங்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை சரிபார்த்து ஜூன் மாதத்திற்கும் இந்த பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
5) பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார்கள் எழுந்தால் தாமதிக்காமல் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கையை எடுத்திட வேண்டும். மேலும் பள்ளி வகுப்பறைகளில், பள்ளியின் அருகாமையில் இருக்கும் காவல் நிலைய எண், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் :1098, உளவியல் ஆலோசனை உதவி எண்: 14417 ஆகிய எங்களை கட்டாயம் ஒட்டி வைக்க வேண்டும்.
ALSO READ 10 POINTS : இந்தியா - நியூசிலாந்து தொடரின் சுவாரஸ்யமான சம்பவங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR