NEET PG 2023 : முதுகலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி...?
NEET PG REGISTRATION 2023 : முதுகலை நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இன்று மதியம் 3 மணி முதல் தொடங்குகிறது. இதில் விண்ணப்பிக்கும் முறை குறித்து படிப்படியாக காணலாம்.
NEET PG REGISTRATION 2023 : மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியமான (NBEMS) 2023ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு (NEET PG) இன்று (ஜன. 7) மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளது. தேர்வு மற்றும் தேர்வு தொடர்பான பிற முக்கிய தேதிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது. விண்ணப்பித்தின் இணைப்பை natboard.edu.in இணையத்தில் இன்று மதியம் 3 மணி முதல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, ஆன்லைன் வழியாகவே தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 27 என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு முதுகலை நீட் தேர்வு மார்ச் 5ஆம் தேதி அன்று நடத்தப்படும் என்றும் தேர்வு முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மண்டல் vs கமண்டலம் : தொடங்குகிறது ஜாதிவாரி கணக்கெடுப்பு - யாருக்கு பயன்?
முதுகலை நீட் தேர்வுக்கான முக்கிய தேதிகள்
பதிவு தொடங்கும் தேதி - ஜனவரி 7
பதிவு செய்வதற்கான கடைசி தேதி - ஜனவரி 27
முதுகலை நீட் தேர்வு தேதி- மார்ச் 5
விண்ணப்பம் திருத்தவதற்கு முதல் நாள் - ஜனவரி 30
விண்ணப்பம் திருத்தவதற்கு கடைசி நாள் - பிப்ரவரி 3
அட்மிட் கார்டு - பிப்ரவரி 27
NEET PG 2023 முடிவு - மார்ச் 31
முதுகலை நீட் தேர்வுக்கு எப்படி பதிவு செய்வது?
தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வத் தளமான natboard.edu.in இணையப்பக்கத்திற்கு செல்லவும்.
அதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் NEET PG 2023 இணைப்பைக் கிளிக் செய்யவும். இணைப்பு இன்று மாலை 3 மணி முதல் செயல்படும்.
உள்நுழைவு விவரங்களை கொடுத்து, விவரங்களை சமர்பிக்கவும்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கி, மேலும் தேவைக்காக அதன் நகலை பிரிண்ட் எடுத்து வைத்திருக்கவும்.
முதுகலை நீட் தேர்வு என்பது பல்வேறு MD/MS மற்றும் PG டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கைக்கான ஒற்றை நுழைவுத் தேர்வாகும். அனைத்து விண்ணப்பதாரர்களும் முதுகலை நீட் தேர்வு குறித்த உடனடி தகவல்களுக்கு சமீபத்திய அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ