NTPC Jobs: வேலை தேடும் எஞ்சினியர்களுக்கு அருமையான அரசு வேலை! என்டிபிசியில் பணி
Job Alerts: இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனம் என்.டி.பி.சியில் வேலைவாய்ப்பு ரெடி
புதுடெல்லி: நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனம் என்.டி.பி.சி எனப்படும் National Thermal Power Corporation Limited நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் காலியாக இருக்கும் பணிகளுக்கு நியமனம் செய்கிறது.
பணி நியமன நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது. மொத்தம் 864 காலி பணியிடங்கள் உள்ளன. என்ஜினீயரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு இது. இந்தியாவில் உள்ள மாநில மின்சார வாரியங்களுக்கு மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோக பணியில் ஈடுபட்டுள்ள என்.டி.பி.சி நிறுவனம், பொறியியல், திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஆலோசனை மற்றும் ஆயத்த தயாரிப்பு திட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது.
மேலும் படிக்க | பேங்க் வேலை! ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.63840! அசத்தும் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி
தற்போது நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கும் 864 விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு.
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:
பதவியின் பெயர்: எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி
மொத்த காலியிடங்கள்: 864
மேலும் படிக்க | டிவிட்டரை வாங்கினா 75% பணியாளர்களை தூக்கிடுவேன்! எலோன் மஸ்க் திட்டம்?
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் , மெக்கானிக்கல் என்ஜினீயரிங் , சிவில் என்ஜினீயரிங் , மைனிங் என்ஜினீயரிங்
சம்பளம்: 40,000 - 1,40,000/- ரூபாய்
வயது வரம்பு: அதிகபட்ச வயது 27
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2022
மேலும் படிக்க | NCERTயில் வேலை செய்ய விருப்பமா? இந்த தகுதிகள் இருந்தால் உடனே விண்ணப்பிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ