தேசிய கல்வி கொள்கை 2020 தொடர்பான ஆளுநர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கல்வி கொள்கை நாட்டின் இளைஞர்களை, கல்வி மற்றும் திறன் ஆகிய இரு துறைகளிலும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தயார் செய்யும் என்று பிரதமர் கூறினார். அதே நேரத்தில், கல்வி முறைமையில் செய்யப்படும் அடிப்படை மாற்றங்களில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறினார். 


கல்வி அமைச்சகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கருப்பொருள் உயர்கல்வித் துறையில் 'தேசிய கல்வி கொள்கை -2020 இன் பங்கு' ஆகும். இதில் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கின்றனர்.


மாநாட்டில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி கல்வி கொள்கையும் கல்வி முறையும் நாட்டின் குறிக்கோள்களை நிறைவேற்ற ஒரு முக்கியமான ஊடகம். மத்திய, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் கல்வி துறைக்கு பொறுப்பு என்றாலும், கல்வித் துறையில் அரசின் தலையீடு மிக மிக குறைவாக இருக்க வேண்டும் என்றார் 


எதிர்காலத்தை மனதில் கொண்டு தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்கள் கிராமங்களுக்கும் விரிவடைந்து வருவதால், தகவல் மற்றும் தொழில் ரீதியிலான தேவையும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் தொழில்நுட்ப கல்வியை அதிகமாக ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு என்றார் பிரதமர் மோடி.


இந்த கல்வி கொள்கை அரசின் கல்வி கொள்கை அல்ல. இது தேசத்தின் கல்வி கொள்கை. வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு கொள்கை  என்பது தேசத்தின் கொள்கை என்பதைப் போலவே, கல்விக் கொள்கையும் தேசத்தின் கொள்கையாகும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.


தேசிய கல்வி கொள்கை,  21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார அம்சத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கப் போகிறது. இது தன்னம்பிக்கை கொண்ட வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி


தேசிய கல்வி கொள்கையின் வெற்றிக்கு மத்திய மற்றும் மாநிலங்களின் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.


கல்வியின் மூலம், தேசிய நலனில் அக்கறை கொள்ளும் அதே நேரத்தில், உலக நலனையும் கருத்தில் கொள்ளும் மாணவர்களை உருவாக்கி, உண்மையான உலகளாவிய குடிமகனாக மாறக்கூடிய மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும் என என குடியரசுத் தலைவர்  மேலும் கூறினார்.


ALSO READ | கிட்டதட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து தப்ப சில நேர்மறை சிந்தனைகள்..!!!