சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனங்களுக்கு பதிலாக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது மிகப் பெரிய அநீதி என்று தமிழக எம்.பி சு. வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சென்னைக் கிளையில் ஆசிரியப் பணியிடங்கள் காலியாக இருந்தன. 


இந்த விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆசிரியர் பணி நியமனத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தின் மெத்தனப் போக்கையே இது காட்டுகிறது என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



காலி பணியிடங்கள் தொடர்பாக தகுதியுள்ளவர்கள் நேரடியாக வந்து நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகியிருந்தது.


இது தொடர்பாக, சமூக நீதி புறக்கணிக்கப்படுவது உட்பட பல கேள்விகளை முன் வைத்து மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.அந்த கடிதத்திற்கு பதில் வந்துள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் சு.வெங்கடேசன், குறிப்பிட்டுள்ளார்.



அறிவுதான் ஒரு சமுதாயம் முன்னேற வழிவகுக்கிறது.இதனால் தான் கல்வி மிக முக்கியமான சமூகபணியாக கருதப்படுகிறது. ஆனால் ஆசிரியர் நியமனங்களில் மெத்தனம் காணப்படுவது ஏன்? ஆசிரியப் பணியிடங்கள் காலியாகவிருப்பது முன்னரே தெரிந்திருந்தாலும் ஏன் முன்கூட்டியே ஆசிரியர்கள் நியமனங்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 


மேலும், அந்த குறிப்பிட்ட விளம்பரத்தில் பணியிடங்களில் இட ஒதுக்கீடு பற்றியும், எந்தப் பிரிவினருக்கு எவ்வளவு இடம் என்பது தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், குறுக்கு வழி நியமனம்; இட ஒதுக்கீடு கை கழுவலுக்கான வழிமுறை என்றும் சாடியிருந்தார்.


நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை பெற்றுக் கொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கோரிக்கையை பரிசீலிப்பதாக பதில் அனுப்பியுள்ளார்.


Read Also | 23 தமிழக மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு L முருகன் கோரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR