புதுடில்லி: புதிய விதிகளின்படி, இப்போது மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தற்காலிகமாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ICAI) துவக்கநிலை கோர்சில் (Foundation Course) சேர முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே தற்காலிக சேர்க்கை முறைப்படுத்தப்படும். புதிய விதிகளின் உதவியால், மாணவர்கள் தற்போது இருக்கும் கால அளவை விட ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பட்டய கணக்காளர் (Chartered Accountant) ஆக முடியும்.


ICAI தலைவர் அதுல் குமார் குப்தா கூறுகையில், '1988 ஆம் ஆண்டு பட்டய கணக்காளர் ஒழுங்குமுறை, 1988 இன் விதிகள் 25 E, 25 F மற்றும் 28 F ஆகியவற்றை திருத்துவதற்கு இந்த நிறுவனம் சமீபத்தில் அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றது. இதன் மூலம் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் ICAI-ன் Foundation Course-ல் தற்காலிக பதிவை செய்யலாம். இருப்பினும், 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியின் அடிப்படையில் தான் தற்காலிக சேர்க்கை வழக்கமான சேர்க்கையாக மாற்றப்படும்.' என்றார்.


ALSO READ: #ModiAddressOnZee: பிரதமர் மோடியின் உரையின் சிறப்பம்சங்கள் என்ன?


மாணவர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும்


இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள அடிப்படை நோக்கம் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் மாணவர்கள் தற்காலிகமாக Foundation Course பாடத்தில் பதிவு செய்ய அனுமதிப்பதாகும். குப்தா கூறுகையில், ‘இது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும்போது மாணவர்கள் இந்த பாடப்பிரிவுக்கு தயாராக உதவும். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொள்ளவும், CA Foundation Course-கு முன்னரே படித்து, அதில் தேர்ச்சி பெற தேவையான நேரத்தையும் தெளிவையும் அளிக்கும்.


ICAI Foundation Course மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் வகுப்புகளையும் வழங்குகிறது. அவற்றை மாணவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பயிலலாம்.' என்று தெரிவித்தார். 


ALSO READ: COVID தொற்றால் கண் பார்வை கோளாறு ஏற்பட்ட முதல் நோயாளி பற்றி AIIMS பகீர் தகவல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR