ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய ஆட்சிமாற்றம் வந்த பிறகு அந்நாட்டின் இயல்பு வாழ்க்கை மாறிப்போனது. நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேற, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலிபானின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஆப்கானிஸ்தானில் பெண்கள் இடைநிலைக் கல்வி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியாகியுள்ளது.


இந்த முறை 'புதிய மற்றும் மேம்பட்ட' ஆட்சி அமையும் என்று தலிபான்கள் அறிவித்ததற்கு எதிராக உள்ளது. தலிபான்களின் அறிவிப்பில் உயர்நிலைப் பள்ளிகளை சிறுவர்களுக்காக மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகள் பற்றி அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏழாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கான அனைத்து பள்ளிக்கூடங்கள் அனைத்தையும்  சனிக்கிழமை (செப்டம்பர் 18 முதல் மீண்டும் தொடங்குமாறு ஆப்கானின் புதிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.


ALSO READ | லாரி டிரைவர்களுக்கு 72 லட்சம் ரூபாய் சம்பளம்


முன்னாள் தலைவர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிய உடனேயே, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பயங்கரவாத அமைப்பின் முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் பெண்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.


ஆப்கானிஸ்தானில் இதற்கு முன்பு தாலிபன்கள் முந்தைய ஆட்சி நடைபெற்றபோது பெண்கள் மற்றும் சிறுமிகளின், கல்வி, வேலை மற்றும் பிற அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டன. ளைப் பயன்படுத்துவதைத் தடுத்தது. இருப்பினும், பெண்கள் படிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடந்த ஆட்சியைப் போல சித்திரவதை செய்யப்பட மாட்டார்கள் என்றும் இந்த முறை, தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.


முந்தைய அறிவிப்பு இளம் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதித்தது ஆனால் அவர்கள் முகம் மற்றும் உடலின் அனைத்து பாகங்களையும் மறைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன். இது தவிர, பாலின அடிப்படையில் வகுப்பறைகளை பிரித்து, பெண்களுக்கு ஆசிரியைகள் மட்டுமே பாடம் நடத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலை பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்க வேண்டும் என தாலிபன்கள் தெரிவித்தனர். 


Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி


கல்வி கற்றுக் கொடுக்க ஆசிரியைகள் கிடைக்காததால், 'நல்ல குணமுடைய’ வயது முதிர்ந்த ஆசிரியர்களை (ஆண்கள்) ; தற்காலிகமாக பெண்களின் வகுப்புக்கு பாடம் எடுக்க நியமிக்கலாம் என்று கூறப்பட்டது.


ஆண்களுக்கான வகுப்புகள் முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே பெண்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும், ஆண்களுடன் எந்தவொரு பெண்ணும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் தாலிபன்கள் உத்தரவிட்டனர். இதனால் ஆண்கள், பெண்களைப் பார்த்து மனதில் சலனம் ஏற்படாமல் இருக்க உதவும் என்று கூறப்பட்டது.
 
ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலைமை முந்தைய தாலிபன்களின் ஆட்சியில் இருந்ததைப் போலவே மோசமானதாக இருக்கும் என்பதும், பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்த கவலைகள் இனிமேல் நிரந்தரமாக இருக்கும் என்பதும் அனைவருக்கும் கவலையளிக்கிறது. 


பாலின சமத்துவம் என்பது ஒருபுறம் இருக்கட்டும், எங்களை ஒரு மனிதராக நிம்மதியாக வாழவிடுங்கள் என்பதே அங்குள்ள பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது.


ALSO READ | மாடித் தோட்டம் சரி, 'டாக்ஸி தோட்டம்' கேள்விப்பட்டதுண்டா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR