வேலைவாய்ப்பு: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் காலிப்பணியிடங்கள்
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிவகங்கை மற்றும் நாகப்பட்டினத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் 50 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த காலிப் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட இருக்கும் நிலையில், தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த காலிப் பணியிடத்துக்கு 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப் பணியிடம் என்ன?
பகுதி நேர தூய்மைப் பணியாளர் (Cleaning Staff)
காலியிடங்களின் எண்ணிக்கை : 50
சிவகங்கை : 19 (ஆண் – 22, பெண் – 14)
நாகப்பட்டினம் : 15 (ஆண் – 6, பெண் -8)
கல்வி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தொகுப்பூதியம் : ரூ. 3,000
வயது: 01.07.2022 தேதியில் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 35 வயது வரையிலும் வயது வரம்பு தளர்வு உண்டு
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/05/2022051044.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/05/2022051059.pdf என்ற இணையப் பக்கங்களில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
முகவரி :
சிவகங்கை : மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை
நாகப்பட்டினம் : மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அறை எண் – 222, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்
கடைசி தேதி : 30.05.2022
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/05/2022051038.pdf என்ற இணைய பக்கத்தை பார்வையிடவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR