டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்பப்ட உள்ளன. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!


விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் தேர்வுகளின் முழுமையான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா தேர்வில் முதலிடம் பிடித்தார்.


குரூப் 1 தேர்வுகளைத் தொடர்ந்து ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் நடைபெற்ற தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதினர். முதன்முறையாக குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் ஒரே தேர்வாக நடத்தப்பட்டது. இந்த முடிவுகளின் அடிப்படையில் முதன்மை தேர்வு நடைபெற இருக்கிறது. இதேபோல், குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு சுமார் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 


மேலும் படிக்க | தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ