டிஎன்பிஎஸ்சி நடத்திய இளநிலை உதவியாளர், தட்டச்சர், வசூலிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட  7,138 குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த தேர்வை, 18.50 லட்சம் பேர் பங்கேற்று எழுதினர். கிட்டதட்ட 84 விழுக்காட்டினர் தேர்வை எழுதியிருக்கின்றனர். பாடத்திட்டம் மாற்றத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் டிஎன்பிஸ்சி தேர்வு. அதாவது, அங்கிலம் பாடத்திட்டம் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் மொழிப் பாடம் மற்றும் பொது அறிவு, கணக்கு உள்ளிட்ட பாடத்திட்டங்களைக் கொண்டு தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | TNPSC Group4Exam:டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்படி இருந்தது? தேர்வர்கள் கருத்து


பொது அறிவு பிரிவில் 100 கேள்விகளுக்கும், தமிழ் பாடப்பிரிவு நூறு கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தது. வழக்கம்போல் தமிழ் மொழிப் பாடம் எளிமையாக இருந்தது. கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பொது அறிவு கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. தேர்வை எழுதிய பிறகு பேசிய தேர்வர்கள், அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததால், தேர்வு மிக கடினமாக இருக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் தேர்வு மிக மிக எளிமையாக இருந்தது. குறிப்பாக தமிழிலும், கணிதமும் எளிதில் விடையளிக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்தனர். 


இதனிடையே, குரூப் 4 தேர்வுக்கான யூகிக்கப்பட்ட கட்ஆப் விவரங்கள் வெளியாகிக் கொண்டிருகின்றனர். கடந்த ஆண்டு மற்றும் முந்தைய தேர்வுகளின் கட் ஆப் மதிப்பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பிருந்தாலும், பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என்றே தெரிகிறது. 


குரூப் 4 2022 தேர்வு கட் ஆப் கணிப்பு   


OC - 175 +
BC - 168 +
MBC- 165 +
SC/ST- 157+


இந்த மார்க்குகளின் அடிப்படையில் கட் ஆப் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிஎன்பிஎஸ்சி கட் ஆப் முடிவுகள் மட்டுமே இறுதியானது. இதில் மாறுதல்கள் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.  


மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ