பள்ளி மாணவர்களுக்கு பெரும்பாலும் கடிணமான பாடம் என்னவென்றால் கணக்கு பாடம் தான். ஆனால் கணக்கு பாடத்தினை மிகவும் எளிமையாக்கும் வகையில் கர்நாடகா ஆசிரியர்கள் புதிய யுக்தி ஒன்றை கண்டறிந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணக்கு பாடத்தினை எளிமையாக்கும் விதமாக பெருக்கல் அட்டவணையினை மாணவர்களுக்கு பாடல் மற்றும் நடனத்துடன் ஆசிரியர்கள் கற்பித்துள்ளனர். இந்த பாடத்தினை கற்று கர்நாடகா பள்ளி மாணவர்கள் நனடத்துடன் 3-ஆம் பெருக்கல் வாய்ப்பாடினை கூறும் அழகு தற்போது வீடியோவாக இணையத்தில் வெளியாகியுள்ளது.


வசந்தி ஹரிபிரகாஷ் என்னும் ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும்பான்மை பயனர்களை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவிற்கு அவர் தலைப்பிடுகையில்., “இந்த #கன்னட பள்ளியில் எனக்கு 3-அட்டவணை கற்பிக்கப்பட்டிருந்தால்.... எனது #கணிதத்தைப் பற்றி உறுதியாக தெரியவில்லை, குறைந்தபட்சம் நடன திறமையாவது பெற்றிருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மாணவர்கள் 3-ஆம் வாய்ப்பாட்டினை, பள்ளி சீருடை அணிந்தபடி குழுவாக நடனமாடி கூறுகின்றனர். 


வைரல் வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, சுமார் 17,700 பார்வைகளையும், 900-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 200-க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.


இந்த வீடியோவினை பார்த்த பயனர்கள் சிலர் ஆசிரியர்களின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர். வீடியோ குறித்து பயனர் ஒருவர் தெரிவிக்கையில்., “ஆஹா... மிகவும் புதுமையான கற்றல் வழி. குழந்தைகள் ரசிப்பதாகத் தெரிகிறது. நான் இது போன்ற அட்டவணைகளைக் கற்றுக்கொண்டிருந்தால், நான் ஒரு சிறந்த நடனக் கலைஞராக இருந்திருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 


மற்றொரு பயனர் "அட்டவணைகள் கற்றுக்கொள்வதற்கான நல்ல வழி ... நடனம், ரசித்தல் மற்றும் கற்றுக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.