புதுடில்லி: பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 


தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் மோடி தலைமையிலான பாஜக 350 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. அனல் காங்கிரஸ் கூட்டணி 92 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதியில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூட கிடைக்காதா சூழல் ஏற்பட்டு உள்ளது.


2014 மற்றும் 2019 என தொடர்ந்து இரண்டாது முறையாக வெற்றி பெற்று மத்தியில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசியில் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 6,74,664 வாக்குகள் கிடைத்தன. அவரின் வாக்கு சதவீதம் 63.62 சதவீதமாகும். வாரணாசியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 1,52,548 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அவரின் வாக்கு சதவீதம் 14.38 ஆகும்.


Caption

2019 ,நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டிய பாஜக மிகவும் உற்சாகத்தில் உள்ளது. நாடு முழுவதும் அதன் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


இந்தநிலையில், இன்று புது டெல்லியில் உள்ள பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா, அவரை சந்தித்து வெற்றியை குறித்து பேசினர். இருவரும் அத்வானியிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.


Caption