மோடியின் இரண்டாம் முறை பதவிகாலத்தின் போதும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவா தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சருக்கு இணையான (MoS) அந்தஸ்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்க உள்நாட்டு பயங்கரவாதிகளும் தீட்டும் திட்டங்களை மத்திய உளவுத்துறையினர் கண்டுபிடிக்கும்போது அவ்வகையிலான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்களை பாதுகாக்கும் மிக முக்கியமான பொறுப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையே அதிகமாக சார்ந்திருக்கும்.
 
அவ்வகையில், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கு 5 ஆண்டுகளுக்கு அமைச்சருக்கு நிகரான கேபினட் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.


மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு அரசு வட்டாரத்தில் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.