புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்குவதால், அந்த நிதியாண்டின் தொடக்கத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக, உங்கள் பணம் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் ஏற்படும். 2024-25 நிதியாண்டின் தொடக்கத்தில், பணம் மற்றும் சேமிப்பு தொடர்பான பல முக்கியமான மாற்றங்களும் வர இருக்கிறது. Fastag, தனிநபர் நிதி, முதலீட்டு திட்டங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வர இருக்கிறது. இந்த மாற்றங்கள் உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FASTag இன் புதிய விதி


முதலில் Fastag பற்றி பேசலாம். ஏப்ரல் 1 முதல் Fastag தொடர்பான பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. வங்கியில் இருந்து உங்கள் காரின் Fastag இன் KYC ஐ நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் Fastag KYC ஐ நீங்கள் செய்யவில்லை என்றால், அதை இன்றே செய்துவிடுங்கள், ஏனெனில் மார்ச் 31க்குப் பிறகு, வங்கிகள் KYC இல்லாத Fastagகளை செயலிழக்கச் செய்யும் அல்லது தடுப்புப்பட்டியலில் சேர்க்கும். இதற்குப் பிறகு, Fastag -இல் இருப்பு இருந்தாலும் பணம் செலுத்தப்படாது. அதேநேரத்தில் நீங்கள் டோலுக்கு இரட்டிப்பு சுங்க வரி செலுத்த வேண்டும். RBI விதிகளின்படி Fastag க்கான KYC செயல்முறையை முடிக்குமாறு ஃபாஸ்டாக் வாடிக்கையாளர்களை NHAI கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | ஹோலி பண்டிகைக்கு ஜாக்பாட்.. இலவசமாகப் பெறலாம் எல்பிஜி சிலிண்டர்


NPS அமைப்பில் மாற்றங்கள்


புதிய நிதியாண்டில் என்பிஎஸ் அதாவது தேசிய ஓய்வூதிய அமைப்பில் மாற்றம் இருக்கும். ஏப்ரல் மாதத்திலிருந்து, ஓய்வூதிய நிதிக் கட்டுப்பாட்டாளர் அதாவது PFRDA, தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய அமைப்பின் login செயல்முறையில் மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது. புதிய விதி ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும். புதிய விதியின் கீழ், NPS கணக்கில் two factor authentication அங்கீகாரம் தேவைப்படும். NPS சந்தாதாரர்கள் ஆதார் சரிபார்ப்பு மற்றும் மொபைலில் பெறப்பட்ட OTP மூலம் login செய்ய வேண்டும்.


பான் எண் ஆதார் இணைப்பு காலக்கெடு


பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2024 ஆகும். இதற்குப் பிறகும், யாராவது விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், அதாவது பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், அவருடைய பான் எண் ரத்து செய்யப்படும். பான் கார்டை ரத்து செய்வதால், உங்களால் வங்கிக் கணக்கைத் திறக்கவோ அல்லது பெரிய பரிவர்த்தனை எதுவும் செய்யவோ முடியாது. பான் எண்ணைச் செயல்படுத்துவதற்கு ரூ. 1000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


EPFO இன் புதிய விதி


புதிய நிதியாண்டில் இபிஎஃப்ஓவில் பெரிய மாற்றம் இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஏப்ரல் 1 முதல் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. புதிய விதியின்படி, நீங்கள் பணி மாறினாலும், உங்களின் பழைய பிஎப் தானாக மாற்றப்படும். அதாவது, வேலை மாறும்போது பிஎஃப் தொகையை மாற்றக் கோர வேண்டிய அவசியமில்லை.இதுவரை யுனிவர்சல் அக்கவுன்ட் எண் அதாவது யுஏஎன் வைத்திருந்த பிறகும், பிஎஃப் தொகையை மாற்றக் கோர வேண்டும். புதிய நிதியாண்டில் இருந்து இந்த சிரமம் முடிவுக்கு வரும்.


எஸ்பிஐ கிரெடிட் கார்டு


உங்களிடம் எஸ்பிஐ கிரெடிட் கார்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. எஸ்பிஐ ஏப்ரல் 1, 2024 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பல முக்கிய மாற்றங்களைச் செய்கிறது. ஏப்ரல் 1 முதல் வாடகை செலுத்தினால், உங்களுக்கு ரிவார்டு பாயிண்ட் எதுவும் வழங்கப்படாது. சில கிரெடிட் கார்டுகளில் ஏப்ரல் 1 முதல் இந்த விதியும், சில கிரெடிட் கார்டுகளில் ஏப்ரல் 15 முதல் இந்த விதியும் பொருந்தும்.


எல்பிஜி எரிவாயுவின் புதிய விதி


நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் போலவே, ஏப்ரல் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டர்களின் விலையும் மாற்றியமைக்கப்படும். லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை. நிதிக் காலண்டர் முடிவதற்கு இன்னும் 7 நாட்கள் உள்ளன. நிதிக் காலண்டர் முடிவதற்குள் அதைத் தீர்த்து வைப்பது நல்லது.


புதிய வரி விதிப்பு


ஏப்ரல் 1, 2024 முதல், புதிய வரி முறை இயல்புநிலை வரி விதியாக மாறும். அதாவது, வரி தாக்கல் செய்யும் முறையை நீங்கள் இன்னும் தேர்வு செய்யவில்லை என்றால், புதிய வரி முறையின் கீழ் தானாக வரி செலுத்த வேண்டும். ஏப்ரல் 1, 2023 முதல் வருமான வரி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். புதிய வரி முறையின் கீழ், 7 லட்சம் ரூபாய் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.


மேலும் படிக்க | EPFO UAN Profile விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும்? தேவையான ஆவணங்கள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ