சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் மகாராஷ்டிராவில் பாஜக அரசை உருவாக்க முடியாது என சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி முடிவடைந்த மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், சிவசேனா கட்சியின் ஆதரவு இல்லாமல், பாரதிய ஜனதா கட்சியால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற கருத்தை முன் வைத்துள்ளார் சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத்.


கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தனி தனியே போட்டியிட்ட இவ்விரு கட்சிகளில், பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 62 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதன் பிறகு கூட்டணி அமைத்த இரு கட்சிகளும், முதன்முறையாக இந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்டன. எனினும், தேர்தலின் கடைசி நிமிடம் வரை, இந்த கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில், தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், தேர்தல் முடிவடைந்த நிலையிலும், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஆதரவு இல்லாமல், பாஜகவால் வெற்றி பெற இயலாது என்ற தன் கருத்தை முன் வைத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத்.


மேலும், பாஜக-சிவசேனா கட்சிகள் இந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்ட நிலையிலும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தற்போதும் நிலவி வருவதாக கூறிய அவர், ஏற்கனவே பலமுறை பாஜகவிற்கு எதிராக, சிவசேனா கட்சி வேட்பாளர் தான் முதலமைச்சர் ஆக வேண்டும், காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று விடுமோ என்ற பயத்தில் தான் பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சார்த்தில் ஈடுபட்டனர் என்பது போன்ற கருத்துக்களை முன் வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.