வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி!
கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
20 மக்களவை தொகுதிகள் கொண்டு கேரளாவில் கடந்த ஏப்ரல் 23-ஆம் நாள் மக்களவை தேர்தல் நடைப்பெற்றது. இங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி (723486 வாக்குகள்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி சுனீர்-ஐ (269189 வாக்குகள்) விட சுமார் 4.5 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இவர்களுக்கு அடுத்த நிலையில் BDJS கட்சியின் துசாஹர் வெள்ளப்பள்ளி 90461 வாக்குகளுடனும், பகுஜன் சமாஜ் கட்சி 2868 வாக்குகளுடனும் பின்தங்கியுள்ளது.
17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.