ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அமைக்கும் என குமாரி செல்ஜா தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற 51 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், 2 மக்களை தொகுதிக்கான தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அமைக்கும் என குமாரி செல்ஜா தெரிவித்துள்ளார். 


ஹரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா வியாழக்கிழமை தனது கட்சி மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஹரியானா தீர்ப்பை வழங்கியுள்ளது - இது பாஜகவின் தவறான நிர்வாகத்தை இனி பொறுத்துக் கொள்ளாது" என அவர் தெரிவித்துள்ளார். "கடந்த 5 ஆண்டுகளில் தனது மக்களுக்கு ஏற்படுத்திய தீங்குகளை விட்டு வெளியேறத் தேர்வு செய்து, காங்கிரஸின் தலைமையில் நீதி மற்றும் சமத்துவத்தின் ஒரு புதிய விடியலைத் தழுவுவதற்கு அரசு தயாராக உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற இடங்களில், ஆளும் பாஜக 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு எட்டு குறைவு, காங்கிரஸ் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) 11 இடங்களில் முன்னிலை வகித்தது, சுதந்திர வேட்பாளர்கள் ஆறு இடங்களில் முன்னிலை வகித்தனர்.