Elections 2021: கோவிட் பாதிப்புள்ளவர்கள் கடைசி 1 மணி நேரத்தில் வாக்குகளை செலுத்தலாம்
கேரள சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணிநேரத்தில் கோவிட் -19 பாதித்தவர்கள் வாக்களிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரள சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணிநேரத்தில் கோவிட் -19 பாதித்தவர்கள் வாக்களிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. வாக்குப்பதிவுக்கான சகல முன்னேற்பாடுகள் முடிந்தன. அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று சேர்ந்தனர்.
ஏப்ரல் ஆறாம் தேதியன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு நிறைவடையும். COVID-19 நோயாளிகளும், தனிமைப்படுத்தப்பட்டவர்களும், பிபிஇ கிட்களை அணிந்துகொண்டு வாக்களிக்கலாம் என்றும், அவர்களுக்கு கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!
வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை செல்வதற்கு முன்னதாக அவர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு, சானிடைசர்கள் வழங்கப்பட்டு, கைகள் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கோவிட் -19 நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தபால் மூலம் வாக்களிக்கும் வசதியும் செய்துக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 140 சட்டமன்றத் தொகுதிகளில் 957 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 2,74,46,039 வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதில், ஆண் வாக்காளர்கள் 1,32,83,724 பேர், பெண் வாக்காளர்கள் 1,41,62,025 மற்றும் 290 திருநங்கைகள் உள்ளனர்.
சுமார் 30 கம்பெனிகள் அளவிலான மத்திய ஆயுத போலீஸ் படைகள் (சிஏபிஎஃப்) கேரளாவில் தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளன. அவர்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு நடத்தினார்கள். ஏப்ரல் ஆறாம் தேதியன்று பதிவாகும் வாக்குகள், மே 2 ஆம் தேதி எண்ணப்படும்.
Also Read | #MeToo: 'அவர் என் உள்ளாடைகளில் கைகளை வைத்தார்...' நடிகையின் MeToo அனுபவம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR