வேலூர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி!
வேலூர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி என அறிவிப்பு!!
வேலூர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி என அறிவிப்பு!!
நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் பணபட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜூலை 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜூலை18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூலை 19 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 22 ஆம் தேதியாகும்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், வேலூர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி என நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.