நிறைவடைந்தது நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு
தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
இன்று காலை தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
5 மணி முதல் 6 மணி வரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. .
ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு என்ற செய்திகள் வந்தன. அவை சரி செய்யப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கின. ஆனால், மத்திய இணை அமைச்சர் முருகன் ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை ஏழு மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். முதியவர்கள் முதல், முதல்முறையாக வாக்களிக்கும் வாய்ப்பு பெற்ற இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலதரப்பு வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும்.
இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று, அதாவது 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
வேட்புமனு பரிசீலனையில் 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்,14,324 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Latest Updates
சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்கை பதிவு செய்தார்
மத்திய இணையமைச்சர் வாக்கை வேறொருவர் பதிவு செய்ததாக எழுந்த புகாருக்கு மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு
ஒரே வாக்குச்சாவடியில் முருகன் என இரு பெயர்கள் இருந்ததால் குழப்பம்
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி வாக்களித்தனர்
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 5 மணிக்கு நிறைவடைய இருக்கிறது , 5 மணி முதல் 6 மணி வரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்னும் 5 நிமிடத்தில் வாக்குச்சாவடிகளின் வாயிற் கதவு மூடப்பட உள்ளது
மத்திய இணை அமைச்சர் முருகனின் ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்ணா நகர் கிழக்கு - நியூ ஆவடி சாலை குஜ்ஜி தெருவிலுள்ள சென்னை மிடில் ஸ்கூலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று மாலை வாக்களிக்க உள்ளார்.
இந்த நிலையில் P முருகன் என்பவர் வாக்கு பதிவு செய்ய வருகையில் வாக்கு பதிவு மைய ஏஜெண்டுகள் தவறுதலாக இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.
எல்.முருகன் பெயரில் P முருகன் என்பவர் வாக்கு பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் அங்கு பெரிதாக P முருகன் என்பவர் மற்றும் வாக்கு பதிவு மைய ஏஜெண்டுகளிடம் டி.பி சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில், நாமக்கல்லில் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அங்கு, 50.58 சதவீதம் வாக்குகளும் அதனையடுத்து கரூரில் 50.04 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 19 ஆவது வார்டு தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார். அவருடன், குடும்பத்தினரும் வந்து வாக்களித்தனர்.
சென்னை எழும்பூர் தொகுதி 77வது சுத்தபுரம் மாநகராட்சி பள்ளி 2004 எண் கொண்ட வாக்குசாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் வேலைசெய்யவில்லை.
அதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு வாக்குமையத்தில் திடிரென வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அதிகபட்சமாக வாக்குகள் பதிவானதாக காட்டியது. இதனால், வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, சுமார் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கபட்டது
நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் தென்சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 192 வது வார்டில் தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்காளர்கள் உடன் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடைமையாற்றினார்.
சென்னை அடையாறு தாமோதர புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பணத்தை வாரி இறைப்பதாகவும், காவல்துறையும் தேர்தல் ஆணையமும் முன் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சுமத்தினார்.ஆனால், மக்கள் பணம் மக்களிடமே போய் சேருவது மகிழ்ச்சி என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
காலையில் 7 மணிக்கு தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தயவால் பாஜக சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்கவில்லை என்ற குஷ்புவின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜீ தமிழ் நியூஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டியில்,..பாஜக வுடன் நேற்று கூட்டணி இருந்தது என்றும், இன்று இல்லை,நாளைய நிலை பற்றி தெரியாது என்றும் கூறிய அவர்,மக்களுக்கு ஓவ்வொருவரின் சக்தி பற்றி தெரியும் என்றும் தெரிவித்தார்..
மேலும் அதிமுக ரயில் இன்ஜின் என்றும்,பா.ஜ.க ரயில் பெட்டி என்றும் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்களுடன் வந்த கட்சிகளை நாங்கள் தான் இழுத்து சென்றோம், இஞ்சின் இல்லையேல் யாருக்கும் பயனில்லை என காட்டமாக குஷ்பூவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி, நகர பஞ்சாயத்துகளில் 26.54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாநகராட்சிகளில் 16.77 சதவிகிதமும், பேரூராட்சிகளில் 6.95 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் எபாஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு செலுத்தினார்...
தன் தாயார் ராஜாத்தி அம்மாள் வந்திருந்த அவர் அடையாள அட்டையை காண்பித்து வாக்கு செலுத்தினார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் திமுக கூட்டணியின் மீதும், முதலமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் அதனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி, வி.கே சசிகலா தி.நகர், திருமலை சாலையில் உள்ள வித்யோதயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்தார்.
அதிமுகவினர் சாலையின் நடுவே நின்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் டிடிகே சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமம் காவிரி உயர்நிலைபள்ளியில் வாக்கு அளித்தார்.
இயக்குனர் ஹரி மற்றும் மனைவி பிரிதா விஜயகுமார் சாலிகிராமம் காவேரி பள்ளியில் வாக்களித்தனர்.
நீண்ட காலமாக வாக்கு செலுத்தி ஏமாந்தவர்களுக்கு வெறுப்பு உணர்வால் வாக்கு பதிவு மந்தமாக இருக்கும். மறைமுக தேர்தல் என்பதால் ஆர்வம் குறைவாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.
சென்னை எஸ் ஐ டி கல்லூரியில் அமைக்கபட்டுள்ள வாக்கு சாவடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,21 மாநகராட்சியும் திமுக கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் 122 வது வார்டில் எனது வாக்கினை ஜனநாயக முறைப்படி செலுத்தினேன் என்று கூறிய முதல்வர், மாநில அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்பு மூலமாகவே நிறைவேற்ற முடியும், எனவே வாக்காளர் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பாஜக தேசிய குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பூ வாக்கு செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, வாக்களிப்பது மக்கள் கடமை என்றும், வீட்டிலேயே இருக்காமல் வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பாஜக வுக்கு தனித்து போட்டியிட தைரியம் உள்ளதா என்றும், எங்களை நோட்டா வோடு ஒப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுவிட்டோம் என்று தெரிவித்தார்.
சென்ன ,மந்தைவெளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பாஜக தேசிய குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பூ வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மேல்நிலை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
பல்வேறு வாக்குப் பதிவு மையங்களில் வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 23வது வார்டில் ஓட்டு போடும் இயந்திரம் பழுது ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டதால், வாக்களிப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சென்னையில் வளசரவாக்கம், வேளாங்கண்ணி மெட்ரிக்குலேஷன் பண்ணியில் அமைக்கப்பட்டுள்ள 4296/av வது பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதுதடைந்துள்ளதால் பொது மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கின்றனர்.
சென்னை மாநகராட்சி 120வது வார்டுக்குட்பட்ட திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ராம்நகர் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு கைகளில் வைக்கக்கூடிய மை உடனடியாக அழிவதாக புகார் வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர பஞ்சாயத்தின் 15-வார்டுகளுக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், வாக்குச்சாவடி எண் இரண்டில் வாக்கு பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்த நிலையில் வாக்குச்சாவடி எண் 2 பெண்களுக்கான பூத்தில் வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
வேலூர் மாநகராட்சி 1-வது மற்றும் 12வது வார்டு 56 பூத்தில் அறுப்பு மேடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டில் 93 வயதுடைய ஆதிலட்சுமி என்பவர் யாருடைய உதவியுமின்றி தானாக வந்து ஜனநாயக கடமையாற்றினார்.
வாக்குப்பதிவு செலுத்த வந்த நடிகர் விஜய், முதலில் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குப்பதிவு மையத்திற்கு உள்ளே சென்றுவிட்டார். பின்னர் வெளியில் வந்த நடிகர் விஜய், வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பொதுமக்களிடம், வரிசையில் நிற்காமல் சென்றதற்கு மன்னிப்புக் கேட்டார்.
தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் அவரது கணவர் சௌந்தரராஜன் ஆகியோர் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழகத்தில் எனது வாக்கை செலுத்துவதில் பெருமை அடைகிறேன். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முக்கியமல்ல.
நாம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் எல்லோரும் ஓட்டு போடுங்கள், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட வேண்டும். தெலங்கானாவில் பழங்குடியினர் நடத்தக்கூடிய யாத்திரை கலந்துகொள்ளவேண்டும் இருந்தாலும் முதல் ஆளாக எனது வாக்கை இங்கு பதிவு செய்து இங்கிருந்து புறப்படுகிறேன் என்று தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பகுதிகளில் 102 வாக்கு சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கியது.
ஒசூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு தொடங்கியது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கான மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் 248 மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைப்பெற்று வருகிறது
ஆண்கள்,பெண்கள் என தனி வரிசைகளில் முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினிகளால் கை கழுவிய பின்னரே வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்படுகிறது.
நீலாங்கரையில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் நடிகர் விஜய் வாக்கு பதிவு செய்தார்.
அந்த தொகுதியில், விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக Ecr சரவணன் போட்டியிடுகிறார்.
நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கியது.
காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் கொரோனா தோற்று பரவலை தடுக்கும் விதமாக வாக்குப்பதிவு மையங்களில் சமூக இடைவெளிவிட்டு நின்று சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி கொண்டு அனைவரும் தங்களது வாக்களிக்க காத்திருக்கின்றனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சிகள் மொத்தமாக 277 வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, நாம் தமிழர், பாமக, உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 1607 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
இந்த மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 5,23 823 பெண் வாக்காளர்கள் 5,43,825, என மொத்தம் 10,76,762 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் கூடுதல் பொறுப்பு வகிக்கும் திருமதி தமிழிசை செளந்தரராஜன் இன்னும் சற்று நேரத்தில் சாலிகிராமம் காவேரி உயர்நிலை பள்ளியில் தனது வாக்கினை செலுத்த இருக்கிறார்
சென்னை எஸ் ஐ இடி கல்லூரியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்கு அளிக்ககூடிய வாக்குச்சாவடியில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது