நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரம்ப முதலே அதிக இடங்களில் முன்னணி வகித்த பாஜக 350 இடங்களில் முன்னணி பெற்று மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 92 இடங்களிலும், மற்றவை 100 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.


இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் நடிகைகளின் நிலவரம் என்ன வென்று பார்ப்போம்.


> நடிகை ஹேமாமாலினி பாஜக சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிட்டு வென்றார்.


> சன்னிடியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.


> நடிகை சுமலதா, முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலை தோல்வியுறச் செய்துள்ளார்.


> பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா உத்தரப் பிரதேச மாநிலம் ராம்நகர் தொகுதியில் தோல்வியை அடைந்தார்.


> பத்தேபுர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் ராஜ்பாபர், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.


> காங்கிரஸ் சார்பில் பட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சத்ருகன்சின்ஹாவும் தோல்வியை சந்தித்துள்ளார்.


> பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார்.