சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பில்யில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரி தொடுத்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலின் போது, சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் ஏற்பட்ட வன்முறையால் சுமார் 275-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் போனது. 


இதன் காரணமாக இங்கு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரி விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.


இதைத்தொடர்ந்து பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையமும் மறுத்து விட்டது. 


இந்நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, விஷ்ணுராஜ் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். 


நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இந்த முறையீட்டை ஏற்க மறுத்து., மனுதாரரின் கோரிக்கையை தேர்தல் வழக்கு மூலமாக அணுக அறிவுறுத்தினர்.