தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்!
தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நகரத்தார் வணிக மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், "ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றசாட்டு உண்மையில்லை என்றும் எங்காவது ஓர் இடத்தில் நடக்கும் சில விஷயங்களை வைத்து அவ்வாறு கூறக்கூடாது எனவும் கூறினார். மேலும், தமிழை வளர்ப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் நிர்மலா சீதாராமன் கூறுகையில்; சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில்தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
தஞ்சாவூர் கோவில் போல தென்கிழக்கு ஆசியாவில் பல கோவில்கள் பிரமாண்டமாக இருக்கிறது. அதனுடைய சிற்பக்கலைகள் பாராட்டத்தக்கது. தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும்.
கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையின்போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள் என தெரிவித்தார்.