புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்! உங்கள் பகுதியில் எப்போது?
புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு,நீக்கம்,திருத்தம் போன்றவற்றுக்கான சிறப்பு முகாம் இந்த மாதம் நடைபெற உள்ளது.
சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்காக ,நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த மாதத்தில் முறையே 13/11/2021(சனி) , 14/11/2021 (ஞாயிறு) , 27/11/2021 (சனி) , 28/11/2021 (ஞாயிறு) இந்த தேதிகளில் முகாம்கள் நடைபெற இருக்கிறது .
மேலும் இந்த நாட்களில் நடத்தப்படும் முகாம்கள் பற்றி அந்தந்த மாவட்டங்களில் போதுமான விளம்பரங்களை செய்யவதற்கும்,18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளரின் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, இடமாற்றம் செய்வது , முகவரியில் மாற்றம் செய்வது போன்றவற்றுக்கு தேவையான விண்ணப்பங்களையும் போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் (6) ஐ பூர்த்தி செய்தி தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம். அதனையடுத்து ,வாக்காளர் பெயரை நீக்க படிவம் (7) ஐ பூர்த்தி செய்ய வேண்டும் ,மேலும் வாக்காளர் அட்டையில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதனை சரிசெய்ய படிவம் (8) ஐ பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் முகவரி மாற்றத்திற்கு படிவம் (8A ) வையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதனையும் தெளிவாக பார்த்து உறுதி செய்திடும் வகையிலும் இந்த முகமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் அந்த குறிப்பிட்ட 4 நாட்களிலும் வாக்குச்சாவடியில் அதிகாரிகள் பணியில் தவறாமல் இருக்க வேண்டும் . மேலும் இந்த சிறப்பு முகாம்களின் மூலம் கொரோனா தோற்று பரவாமல் இருக்க தேவையான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அணைத்து முகாம்களும் பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
ALSO READ மதுரையில் விரைவில் மெட்ரோ? அறிக்கை தயாரிக்க அறிவிப்பு வெளியீடு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR