மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 


இந்நிலையில், உலகநாடுகளின் தலைவர்கள் அனிவரும் பிரதமர் மோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவிவ்த்து வருகின்றனர். இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ மோடியை தொடர்புகொண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்திய மக்களுக்கு மிகப்பெரிய தலைவராகவும், சிறந்த மனிதராகவும் அவர் உள்ளார்.  இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள். மோடி மீண்டும் பதவிக்கு வந்ததன் மூலம் இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுவடையும். அவருடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜப்பானில் ஜுன் 29-30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள G-20 மாநாட்டில் ட்ரம்பும், மோடியும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி, பதில் தெரிவித்துள்ளார். அதில், "நன்றி திரு ஜனாதிபதி, இது ஜனநாயகத்தின் வெற்றி, இந்தியாவும் அமெரிக்காவும் பெருமிதம் கொள்கின்றன. எங்கள் இரு நாடுகளுக்கும் உலகிற்கும் சமாதானத்திற்காகவும், செழிப்புடன் பகிர்ந்து கொள்ளவும் அமெரிக்காவுடன் எங்கள் கூட்டுறவை ஊக்குவிப்பேன்" என பதிவிட்டுள்ளார். 



இதேபோல் இலங்கை அதிபர் சிறிசேனா, சவுதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல் அசிஸ், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், முன்னாள் நேபாள பிரதமர் புஷ்பா தஹல் உள்ளிட்ட பல உலகத்தலைவர்களும் மோடி வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.