ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு - காஷ்மீரில், கடந்த 2018, ஜூன் 20-ஆம் தேதி மெஹபூபா முப்தி தலைமையிலான ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, பாஜக திரும்ப பெற்றது. 


இதையடுத்து, அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆளுநர் ஆட்சி அமைந்து, ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை, ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் அனுப்பினார். 


இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கையெழுத்திட, டிச.,19ல் காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.


இதனையடுதுத காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடைப்பெறும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், 2019 இறுதியில் தேர்தல் நடத்தப்படும் எனவும், அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 


இந்நிலையில், குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநில ஆளுநரின் பரிந்துரையின்படி மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.