அதிபர் தேர்தலை முன்னிட்டு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை!
இலங்கை அதிபர் தேர்தலையொட்டி வரும் நவம்பர் 15-ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!
இலங்கை அதிபர் தேர்தலையொட்டி வரும் நவம்பர் 15-ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!
இலங்கையின் 8-ஆவது ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு வரும் நவம்பர் 15-ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் அடைக்கப்படுவதாக பள்ளி கல்விதுறை அறிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம், இலங்கை தேர்தல் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் இது என கருதப்படுகிறது. மேலும் இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆனது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது. அதாவது, 1 மணி நேரம் கூடுதலாக வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் 50%+1 வாக்குகளை பெறுபவரே வெற்றி பெற்றதாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இத்தேர்தல் முடிவும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் வழக்கம்போன்று யாரும் 50% மேல் பெறமாட்டார்கள் என்ற ஊகம் நிலவிவரும் நிலையில், தற்போது 50%+1 வாக்குகள் என்ற அடிப்படையில் வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
35 வேட்பாளர்கள் களம் காணும் இந்த தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50%-க்கு அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால் வெற்றியை, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தேர்தல் பணிகள் மும்மரமாக நடைப்பெறுவதாலும், வாக்குசாவடிகளை தயார் படுத்த வேண்டி இருப்பதாலும் இலங்கையின் அரசு பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.