சென்னை: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒரிசா உட்பட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 23) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தை பொருத்த வரை வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிக்கும், 22 சட்டசபை தொகுதிக்கும் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 


இந்தநிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிராத சஹூ, வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகளை குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, 


> தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் ஒரே நேரத்தில் காலை 8 மணி முதல் எண்ணப்படும்.


> மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்.


> மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு பின்னரே ஒப்பிகை சீட்டு எண்ணப்படும்.


> குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 19 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 


> அதிகபட்சமாக திருவள்ளுவர் தொகுதியில் 34 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 


> நாளை நடைபெற்ற உள்ள வாக்கு எண்ணிக்கையை 88 பார்வையாளர்கள் கண்காணிக்க உள்ளனர்.


> இணையதளம் மூலம் தேர்தல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


> தேர்தல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


> தமிழகம் முழுவதும் 36,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.