இனத் துரோகி காங்கிரஸ் தயவால் நான் MP ஆகவில்லை: வைக்கோ காட்டம்!
‘இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை’ என வைகோ காட்டாம்!!
‘இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை’ என வைகோ காட்டாம்!!
சென்னை: ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தபோது ஓர் இனத்தையே அழித்தது காங்கிரஸ். அந்த கட்சியின் தயவில் நான் ஒருபோதும் பதவிக்கு வரமாட்டேன்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் வைகோ பேசியபோது, காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் தான் என ஆவேசமாக பேசினார். அவரின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தயவில் எம்பி ஆகிவிட்டது அவர் நன்றி மறந்து பேசுவது சரியல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைவர் வைகோ, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் நான் எம்.பி ஆகவில்லை என ஆவேசமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்; ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் தான் நான் எம்.பி. ஆனேன். ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி. ஆனதும் கருணாநிதி தயவால்தான். காங்கிரசின் தயவால் தான், நான் மாநிலங்களைவை எம்.பி ஆனேன் என கே.எஸ்.அழகிரி சொல்வது தவறு, என்மீதான வன்மத்தால் கே.எஸ்.அழகிரி இதுபோன்று பேசுகிறார்.
காஷ்மீர் மசோதாவின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர் வாக்களிக்கவில்லை; அவர்கள் எல்லாம் மத்திய அரசிடம் பணம் வாங்கி விட்டார்களா? இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்.பி.யாக நான் போனதில்லை. பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்த்து தவறை சுட்டிக்காட்டும் தைரியம் உள்ளவன் நான் என தெரிவித்துள்ளார்.